top of page




Sunday tamil service
at 04:00 p.m

mooshüslistrasse 24 6032 emmen(LU)
Viber: +41 78 755 26 67






2001 March மாதத்தில் சகோ.எறிக் யேசுதாசன் அவர்களுக்கு சிறையில் வைத்து கர்த்தராகிய தேவன் தந்த பரலோக பாடல் இதுவாகும்.
நித்திய கிருபையுடன் இரங்கும் இயேசுவே
நித்திய விவாகத்திலென்னை ஏற்றுக்கொள்வீரே
ஆ....ஆ....அல்லேலூயா (3)
ஆமென்....அல்லேலூயா
வானதூதர் என்றுமும்மை போற்றித்துதிப்பரே
நானும்நாளும் அவர்களோடு உம்மைப்போற்றிட
தங்கத்தள வீதியிலே தூதர்களைப்போல்
பரவசமாய் நானுமதில் நடந்துவந்திட
நித்திய போராட்ட ஜெயவீரராய் - உம்
திருத்தலத்தில் வெண்ணாடை அணிந்துநின்றிட
ஏழுவிண் மீன்களை வலக்கரத்தில்கொண்டவரே
ஏழுபொன்குத்து விளக்குமத்தியில் உம்மைக்கண்டிட
மணவாட்டி நானும்மை வானில்சந்தித்து
ஜீவத்தண்ணீர் இலவசமாய் வாங்கிப்பருகிட
உம்மகிமையின் பிரகாசத்தில் நிதம்ஜீவிக்க
உம்ஜனங்களின் கூட்டத்தோடு என்னைஇரட்சியும்

bottom of page